அப்பளம் போல் நொறுங்கிய பஸ்..ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி!! - Seithipunal
Seithipunal


ஹரியானா தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலியான சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அரியானா மாநிலம் அம்பாலா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மினி பேருந்தில் 30க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை சேர்ந்த மினி பேருந்து விபத்துக்குள்ளானதால் பேருந்தில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இருபதுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி கோயிலுக்கு யாத்திரைக்கு சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அரியான தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஹரியானா தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான பேருடன் பயணத்தை 20 பேர் காயம் அடைந்த நிலையில், அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Haryana bus accident one family member 7 person died


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->