சிறுமியை வன்கொடுமை செய்து அந்தரங்க புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பிரபல பாடகர் கைது! - Seithipunal
Seithipunal



சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, அந்தரங்க புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பிரபல பாடகரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அரியானா மாநிலம் குருகிராம் நகரில் வசித்துவரும் போஜ்புரி பாடகர் அபிஷேக் ( 21) இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பிரபலமானவர். யூடியூபில் 27 ஆயிரம் பேர் இவரை பின்தொடர்கின்றனர். 

சில தினங்களுக்கு முன் அபிஷேக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறுமியின் அந்தரங்க புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பாடகர் அபிஷேக்கை கைது செய்தனர். 

போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராஜீவ் நகர் பகுதியில் அபிஷேக் வசித்து வந்த போது, அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியுடன் நட்பாக பழகி, அவரை நம்பவைத்து ஓட்டலுக்கு அழைத்து சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், சிறுமியின் அந்தரங்க புகைப்படங்களை தனது செல்போனில் படம்பிடித்து வைத்துள்ளார். 

இதனையடுத்து அபிஷேக்கிடமிருந்து அந்த சிறுமி விலகியுள்ளார். எனினும் தனக்கு நடந்ததை பற்றி வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமியின் அந்தரங்க புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் சமூகவலைதளத்தில் பாடகர் அபிஷேக் வெளியிட்டதால், இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

அந்த புகைப்படங்களை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாடகர் அபிஷேக்கை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Haryana Child abuse and video threading case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->