விவசாயிகளுடன் நடனமாடிய சோனியா காந்தி.. தன் கையாலேயே விருந்து பரிமாறி உற்சாகம்.! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லியில் ஹரியானா மாநில விவசாயிகளுக்கு விருந்து கொடுத்து அவர்களுடன் உற்சாகமாக நடனமாடியுள்ளார். காங்கிரஸின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி கடந்த ஜூலை 8ம் தேதி டெல்லியில் இருந்து ஹிமாச்சல பிரதேசத்திற்கு சென்றிருந்தார். அப்போது ஹரியானா மாநிலத்திற்கு அவர் சென்றபோது வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் பணி செய்து கொண்டிருப்பதை ராகுல் காந்தி பார்த்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்த விவசாய பொருட்கள் மற்றும் வேலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கேட்டு உரையாடி தெரிந்து கொண்டார். அதன் பின்னர் அங்கிருந்த விவசாயிகளுடன் சேர்ந்து வயலில் நாற்றுக்களை நட்டார். மேலும் டிராக்டர் ஓட்டி மகிழ்ந்தார். 

இந்த நிகழ்வின் போது விவசாய பெண்கள் சிலர் ராகுல் காந்தியிடம் டெல்லியில் இருக்கும் அவரது வீட்டை பார்க்க ஆசையாக இருப்பதாக கோரிக்கை வைத்தனர். அவர்களுக்கு தங்களது வீட்டை காட்டுவதாக ராகுல் காந்தியும் உறுதி அளித்து அங்கிருந்து கிளம்பினார். அவர்களுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றும் விதமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அந்த ஹரியானா பெண் விவசாயிகளை தங்களது டெல்லி வீட்டிற்கு அழைத்து மதிய உணவு கொடுத்து அவர்களுடன் பேசி மகிழ்ந்தார். 

அவர்களை அன்புடன் வரவேற்று விருந்து அளித்ததுடன் நிறுத்தாமல் அவர்களுடன் சேர்ந்து நடனம் ஆடினார். அவர்களுக்கு தனது கையாலேயே உணவை பரிமாறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியின் போது ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் உடன் இருந்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Haryana Farmers dance with Sonia Gandhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->