தனது தந்தை சிலையை சேதப்படுத்தியதற்கு நீதி வேண்டும் - ஷேக் ஹசீனா! - Seithipunal
Seithipunal


வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தனது தந்தை சிலையை சேதப்படுத்தியதற்கு நீதி வேண்டும் என்று கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று வங்காளதேசம் முழுவதும் மாணவர்கள் தீவிர போராட்டம் நடத்தினர். மாணவர்களை கட்டுப்படுத்த துப்பாக்கி சூடு நடைபெற்றதால் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் வங்காளதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் பங்காளதேசத்தில் பெரிய கலவரம் ஏற்பட்டுள்ளது. வங்காள தேசத்தில் பல்வேறு பகுதிகளில் அரசு அலுவலகங்கள் அரசு அதிகாரிகள் அனைவரையும் கலவரக்காரர்கள் தாக்கி வருகின்றனர்.

சமீபத்தில் ஆகஸ்ட் 5ஆம் தேதி  வங்காளதேச பிரதமர் பதவியில் இருந்து வேறு வழியின்றி ஷேக் ஹசீனா பதவி விலகி பின்னர் ராணுவ உதவியுடன் இந்தியா வந்தடைந்தார்.

ஷேக் ஹசீனா மீண்டும் வங்கதேசம் செல்வரா? இந்தியாவில் தொடர்ந்து தங்கி இருப்பாரா? அல்லது இங்கிலாந்து அடைக்கலம் கொடுக்குமா? என்ற கேள்வி பல்வேறு நபர்களாக எழுப்பப்பட்டு வந்தது.

இந்த நிலையில் பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த பிறகு 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் ஷேக் ஹசீனா இந்தியா வந்த பிறகு முதல் முறையாக வங்கதேச வன்முறையை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். வங்கதேசத்தின் தேசிய தந்தையான எனது தந்தை  ஷேக் முஜிபுர் ரஹ்மான் சிலையை சேதப்படுத்தியதற்கு நீதி வேண்டும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

He wants justice for damaging his father statue Sheikh Hasina


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->