சத்தீஷ்கர்: நக்சலைட்டுகள் நடத்திய குண்டு வெடிப்பில் ஹெட் கான்ஸ்டபிள் பலி.!! - Seithipunal
Seithipunal


சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய குண்டுவெடிப்பில் ஹெட் கான்ஸ்டபிள் உயிரிழந்து உள்ளார்.

சத்தீஷ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள ஓர்ச்சா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட படும் கிராம பகுதியில் நக்சலைட்டுகள் பேனர் வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து ஆயுதப்படை போலீசார், மாநிலத் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து சுமார் 300 கி.மீ தொலைவில் உள்ள ஓர்ச்சா காவல் நிலையத்திலிருந்து அதன் சுற்றுப்புறம் வரை காலை 7 மணியளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்பொழுது நக்சலைட்டுகள் மறைத்து வைத்திருந்த பிரஷர் குண்டில் தவறுதலாக கான்ஸ்டபிள் ஒருவர் கால் வைத்ததில் குண்டு வெடித்து சிதறியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே சத்தீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூர் மாவட்டத்தில் வசிக்கும் சஞ்சய் லக்ரா என்ற கான்ஸ்டபிள் உயிரிழந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Head constable killed in blast by naxals in Chhattisgarh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->