பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமை ஆசிரியர் கைது.! - Seithipunal
Seithipunal


பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் வி.கே.அங்கடி. இவர் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரின் செல்போனுக்கு ஆபாச படங்கள் மற்றும் ஆபாச குறுந்தகல்களை அனுப்பி, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதையடுத்து பல மாணவிகளிடம் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க வைப்பதாக கூறி, மாணவிகளை தனியாக வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார். இதைத்தொடர்ந்து பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் இது குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையழுத்து பல மாணவிகள் இதுகுறித்து பெற்றோர்களிடம் கூறியுள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து ராய்ச்சூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து பள்ளிக்கு திரண்ட பொதுமக்கள், தலைமை ஆசிரியரை தாக்க முயன்றனர். ஆனால் போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து, தலைமை ஆசிரியரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Headmaster arrested for sexually harassing schoolgirls in Karnataka


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->