மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு திடீர் உடல் நிலை குறைவு.! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி மேற்கு வங்காளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு சிலிகுரியில் டார்ஜிலிங் சந்திப்புக்கு அருகில் உள்ள டகாபூர் மைதானத்தில் நடைபெற்ற ரூ.1,206 கோடி மதிப்பிலான மூன்று தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டார்.

அப்போது, மேடையில் இருந்து கீழே இறங்கும்போது திடீரென அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. உடனே அவர் தான் மிகவும் சோர்வாக உணர்வதாக நிதின் கட்கரி அருகில் இருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார். 

உடனே அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவர்கள் அழைத்து வரப்பட்டனர். பின்னர் அங்கு வந்த மருத்துவர்கள் அவரை பரிசோதித்ததில், அவருக்கு உடலில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பின் அவர் டார்ஜிலிங் பா.ஜ.க. எம்.பி. ராஜூ பிஸ்டாவின் இல்லத்திற்குச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

health issue in central minister nitin gadkari


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->