இது என்ன புதுசா இருக்கு... கருவில் இருக்கும் குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சையா? - Seithipunal
Seithipunal


நாட்டில் தலைநகரான டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஏற்கனவே மூன்று முறை கரு கலைந்துள்ளது.

இந்த நிலையில், நான்காவது முறை கர்ப்பம் அடைந்து இந்த பெண்ணுக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளனர். அப்போது, கருவில் இருக்கும் குழந்தைக்கு இதயத்தில் அடைப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், அந்த பெண் இந்த குழந்தையை பெற்றெடுப்பதற்கு விரும்பியுள்ளார். அதனால், எய்ம்ஸ் மருத்துவர்கள் அந்த குழந்தைக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை செய்வதற்கு முடிவு செய்து, அதனை அந்த பெண்ணின் பெற்றோருக்கும் தெரிவித்துள்ளனர். 

அதன் படி, மருத்துவர்கள் சவால் நிறைந்த இந்த இதய அறுவை சிகிச்சையில் மகப்பேறு மருத்துவத்துறையுடன் இணைந்து இதயவியல் மருத்துவர்கள் குழுவினரும் ஈடுபட்டு அறுவை சிகிச்சையை செய்தனர்.இதற்காக தாயின் அடிவயிற்றில் சிறிய துளையிட்டு மெல்லிய குழாய் செலுத்தப்பட்டது. 

அந்த குழாய் கருவிலுள்ள குழந்தையின் இதயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் இதயத்தில் இருந்து அடைப்பானை வெற்றிகரமாக நீக்கப்பட்டது. 90 வினாடிகளில் செய்து முடிக்கப்பட்டஇந்த சிகிச்சைக்குப் பின்னர் தாயும் குழந்தையும் நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

மேலும், இதற்கு மேல் குழந்தையின் இதயம் நன்றாக வளரும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த சிகிச்சையை மிக விரைவாக முடிக்கப்பட்டது என்று மருத்துவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

heart surgery on unborn babay in delhi aiims hospital


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->