கார் குண்டுவெடிப்பு: சிரியாவில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!
Car bomb blast in Syria death toll rises to 20
சிரியாவில் நடந்த கார் குண்டுவெடிப்பில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 5 பேர் உயிரிழந்தனர். இதனால், சிரியா கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள மன்பிஜ் நகரில் நேற்று மதியம் விவசாய தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வாகனம் சென்றுகொண்டிருந்தது. அப்போது அந்த வானத்தின் அருகே இருந்த நின்றுகொண்டிருந்த வெடிகுண்டு நிரப்பப்பட்ட கார் திடீரென வெடித்து சிதறியது.இதனால் அந்த பகுதி நிலைகுலைந்துபோனது.
அப்போது இந்த சம்பவத்தில் 15 பேர் உடல் சிதறி உயிரிழந்த நிலையில் மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர் என முதல்கட்ட தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 5 பேர் உயிரிழந்தனர் என்றும் இதனால், சிரியா கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது என்றும் சிரியா அரசு தகவல் தெரிவித்துள்ளது.
English Summary
Car bomb blast in Syria death toll rises to 20