காரைக்கால் – மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் பெங்கல் புயல்.! தமிழகத்திற்கு வந்த அலார்ட்.! - Seithipunal
Seithipunal


தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெங்கல் புயல் வலுவிழந்து வரும் 30ஆம் தேதி காரைக்கால் – மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டிற்கு வரும் 30ஆம் தேதி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

இதனால், தமிழகத்தின் ஓரிரு இடங்களில் 30ஆம் தேதி கனமழை முதல் அதி கனமழை பெய்யக் கூடும் என்றும் டிசம்பர் 1, 2ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இன்று தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

heavy rain in tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->