டெல்லியில் உயர் மட்ட பாதுகாப்பு, குவிக்கபட்டிருக்கும் துணை ராணுவப் படைகள் - Seithipunal
Seithipunal


இன்று பிரதமர் மோடி டெல்லியில் தொடர்ந்து முன்றாவது முறையாக பதவி ஏற்று புதிய வரலாறு படைக்க உள்ளார். ராஷ்டிரபதி பவனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட விழாவில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து விருந்தினர்கள் ஏராளமானோர் கலந்துகொள்வார்கள். ஆகையால், பிரதமரின் பதவியேற்பு விழாவையொட்டி டெல்லி காவல்துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக டெல்லியில் துணை ராணுவப் படைகளின் 5 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதனுடன் ஆளில்லா விமானங்கள் மூலமாகவும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும். மேலும் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இது மட்டும் அல்லாமல், பிரதமரின் சிறப்புப் பாதுகாப்புப் பொறுப்பும் NSG கமாண்டோக்களிடம் இருக்கும்.

இன்று டெல்லியில் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், மொரீஷியஸ், மாலத்தீவு போன்ற நாடுகளின் உயர்மட்ட தலைவர்கள் பிரதமரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவுள்ளனர். டெல்லியில் உள்ள மூன்று ஹோட்டல்களில் அடிக விருந்தினர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, அதன் பாதுகாப்பை டெல்லி காவல்துறை முழுவதுமாக ஏற்பாடு செய்துள்ளது.

தற்போது பாதுகாப்பிற்காக டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளின் வழிகாட்டுதல்கள் குறித்து கடுமையான அறிவுறுத்தல்கள் எல்லோர்க்கும் வழங்கப்பட்டுள்ளன. தேசிய தலைநகர் டெல்லியில் எந்த வகையான வான்வழி கருவிகளையும் பறக்க தடை செய்ய பட்டு உள்ளது. பாராகிளைடர்கள், ஆளில்லா விமானங்கள், வெப்ப காற்று பலூன்கள் போன்றவற்றையும் போலீசார் தடை செய்துள்ளனர். சட்டம் பிரிவு 188ன் கீழ் ஜூன் 9 மற்றும் 10ம் தேதி வரை இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

heavy security in delhi for modi swearing ceremony


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->