சிக்கிமில் கடும் பனிப்பொழிவு - ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்பு..!
heavy snow fall in sikkim indian army thousand peoples rescues
சிக்கிம் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதால், போக்குவரத்து மிக்க கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 12-ந்தேதி அம்மாநிலத்தில் உள்ள சாங்கு ஏரிக்கு சென்று திரும்பி வந்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் பனிப்பொழிவில் சிக்கிக்கொண்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த இந்திய ராணுவம், உள்ளூர் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பனிபொழிவில் சிக்கிக்கொண்ட சுமார் 370 சுற்றுலா பயணிகளையும் பத்திரமாக மீட்டனர். இதைத் தொடர்ந்து சாலையில் நின்ற வாகனங்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.
இந்நிலையில் கிழக்கு சிக்கிமில் உள்ள மலைத்தொடர்களில் சுற்றுலா பயணிகள் பலர் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து, அவர்களையும் அங்கிருந்து மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்திய ராணுவம் 'ஆபரேஷன் ஹிம்ராஹத்' என்ற பெயரில் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு பத்திரமான இடங்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ உதவிகள் உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்பட்டு வருகின்றது.
English Summary
heavy snow fall in sikkim indian army thousand peoples rescues