மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!! திடநம்பிக்கையோடு தேர்வுகளை எழுதுங்கள்.... திருமாவளவன்
Heartiest congratulations Write your exams with confidence Thirumavalavan
தமிழ்நாட்டில் இன்று பன்னிரண்டாம் வகுப்பு மாணவ - மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்தப் பொது தேர்வை மொத்தம் 8,21,057 பேர் எழுதுகின்றனர். இதில் பள்ளி மாணவர்கள் 3,78,545 பேரும் , பள்ளி மாணவிகள் 4,24,023 பேரும், தனித்தேர்வர்கள் 18,344 பேரும், சிறைவாசிகள் 145 பேரும் இந்த ஆண்டு பொதுத்தேர்வை எழுதுகின்றனர். இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ - மாணவிகளுக்கு மனமார்ந்த வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்:
இணையதளத்தில் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், " இன்று முதல் பொது தேர்வுகளை எழுத உள்ள 12 ஆம் வகுப்பு மாணவச் செல்வங்கள் யாவருக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள். திட நம்பிக்கையோடும் பெரும் மகிழ்வுடன் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டுகிறேன். விரும்பும் உயர் கல்வியை பெறுவதற்கு ஏற்ப அனைத்துப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண்களைப் பெற நெஞ்சார வாழ்த்துகிறேன் " என்று பதிவிட்டுள்ளார்.
English Summary
Heartiest congratulations Write your exams with confidence Thirumavalavan