சாம்பியன்ஸ் டிராபி : வைரல் வீடியோ!!! அக்சர் படேல் காலில் விழுந்த விராட் கோலி.... - Seithipunal
Seithipunal


துபாயில் நடைபெற்ற சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நேற்று மோதியது. இதில் இந்திய அணி அசால்டாக வெற்றியைக் கைப்பற்றியது. நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 249 ரன்களை எடுத்து 9 விக்கெட்டுகளை இழந்தது. முதல் அணியான நியூசிலாந்து அணி தொடக்க முதலில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. அதற்கான காரணம் இந்திய அணியின் எளிய இலக்காகக் கூட இருக்கலாம். இதில் இரு அணியின் பந்துவீச்சாளர்களும் சிறப்பாகச் செயல்பட்டனர். இருப்பினும் நியூசிலாந்து அணியின் வீரர்கள் அவுட்டாகி வந்தனர் .


அக்சர் பட்டேல் :

இந்நிலையில் போட்டியின் இக்கட்டான சூழலில், இந்திய அணி சுழற் பந்துவீச்சாளர் அக்சர் பட்டேல், தனது விக்கெட்டைக் கொடுக்காமல் நிதானமாக விளையாடி வந்த வில்லியம்சன் விக்கெட்டை எடுத்தார். உடனே இந்திய அணி வீரர்கள் அக்சர் பட்டேலை வாழ்த்த அவரை நோக்கி ஓடி வந்தனர். அப்போது அக்சர் பட்டேலிடம் ஓடிவந்த விராட் கோலி அவரது காலைத் தொட்டு வணங்க முயன்றார். இதனைச் சுதாரித்துக் கொண்டு அக்சர் பட்டேல் சட்டெனக் கீழே உட்கார்ந்து கொண்டு விராட் கோலி கைகளைப் பற்றிக்கொண்டார். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Champions Trophy Viral video Virat Kohli falls on Axar Patel feet


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->