மும்பையிலும் அமலுக்கு வருகிறது... பின்னால் அமருபவருக்கும் கட்டாயம் ஹெல்மெட்.! - Seithipunal
Seithipunal


இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்பவரும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்ற விதிமுறை மும்பையிலும் அமலுக்கு வருகிறது.

கடந்த மே 21ஆம் தேதி விபத்துக்களை கட்டுப்படுத்தவும், குறைக்கவும், சென்னையில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணிப்பவரும் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்திருந்தது. இந்த விதி முறையானது மே 23 திங்கட்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து மும்பையிலும் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வருபவர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறை அமலுக்கு வருகிறது.

இந்த விதி முறையானது அடுத்த 15 நாட்களில் அமலுக்கு வரும் என்றும், ஹெல்மெட் அணியாவிட்டால் ரூபாய் 500 அபராதமும், 3 மாதங்களுக்கு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று மும்பை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Helmet compulsory in mumbai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->