ரூ.50 கோடி உயர் ரக கஞ்சா போதை பொருள் பறிமுதல்; 05 பேர் சுங்க அதிகாரிகளால் கைது..!
High grade cannabis worth Rs 50 crore seized at airport
நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் சுங்கத்துறையினர் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து மும்பைக்கு அதிகளவில் தங்கம் மற்றும் போதைப்பொருள் விமானம் மூலம் கடத்தி வரப்படுகிறது.
இதனை தடுக்கும் முகமாக மும்பை விமான நிலையத்தில் கடந்த மாதம் 28-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையிலான 04 நாட்களில் சுங்கத்துறையினரால் சிறப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த சோதனையின் போது, அதிகாரிகள் வெளிநாடுகளில் இருந்து வந்த விமான பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது இருவேறு சம்பவங்களில் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.50 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கஞ்சாவை கடத்தி வந்த 05 பயணிகளை கைது செய்துள்ளனர்.
அத்துடன், ரியாத், மஸ்கட் மற்றும் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.93.8 லட்சம் வைரம், ரூ.1½ கோடி தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுங்க அதிகாரிகள் 03 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
High grade cannabis worth Rs 50 crore seized at airport