ஹிஜாப் அணிந்து வந்தால் போலீஸ் நடவடிக்கை பாவும் - அமைச்சர் எச்சரிக்கை.!
hijap issue Karnataka minister warn public exam
கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் உள்ளிட்ட மத அடையாளத்தை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வருவதற்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது .
இதனை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் தொடர்ந்து வந்த வழக்கில் பள்ளி, கல்லூரிகளில் மத அடையாள ஆடைகளை அணிய தடை விதித்த அரசின் உத்தரவு செல்லும் என பெங்களூரு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதற்கிடையே, கர்நாடகாவில் இன்று எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள் தொடங்கி இருக்கிறது. 8.74 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இத்தேர்வை எழுதுகின்றனர்.
மேலும் கர்நாடக மாநில பள்ளி கல்வித்துறை, இந்த தேர்வுகளில் பங்கேற்க்கும் அனைத்து மாணவர்களும் சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், கர்நாடகா கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் விடுத்துள்ள அறிவிப்பில், ஹிஜாப் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பை மீறும் எவரும் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இந்த விவகாரத்தில் அரசு விதிகளை மீறும் நபர்களின் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள். எந்த பள்ளி மாணவியும் இதுபோன்ற விவகாரங்களுக்கு வாய்ப்பு தர மாட்டர்கள் என்று நம்புகிறேன்" என அமைச்சர் பி.சி.நாகேஷ் தெரிவித்துள்ளார்.
English Summary
hijap issue Karnataka minister warn public exam