ஹிந்தியில் எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பு..  இன்று தொடங்கி வைக்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.! - Seithipunal
Seithipunal


நாட்டிலேயே முதல் முறையாக ஹிந்தியில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தொடங்கி வைக்கிறார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் ஹிந்தியில் மருத்துவ கல்வி பயிலும் முறை தொடங்கப்பட உள்ளது. இதனை மத்திய பிரதேச மாநிலத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று  தொடங்கி வைக்கிறார்.


 
மேலும், ஹிந்தியில் எம்பிபிஎஸ் மருத்துவ கல்வி முதலாம் ஆண்டு பாடப் புத்தகங்களையும் அவர் வெளியிடுகிறார். இதுகுறித்து மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

அந்த வகையில் ஹிந்தியில் மருத்துவ கல்வி என்பது மத்திய பிரதேசத்தில் தான் முதல்முறையாக தொடங்கப்பட உள்ளதாகவும் இது ஹிந்தி மொழி தெரிந்தவர்கள் தாய்மொழி மூலமாக படித்து முன்னேற வாய்ப்பாக இருக்கும் என்றும் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

13 அரசு மருதுவக்கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு உடலியல், உயிர் வேதியியல், உடற்கூறியல் ஆகிய 3 பாடங்கள் இந்தியில் கற்பிக்கப்படவுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hindhi MBBS course today introduce in madhya pradesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->