இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - குற்றவாளியின் வீட்டை இடித்து தள்ளிய அதிகாரிகள்.! - Seithipunal
Seithipunal


மத்தியப்பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் அயன் கான் என்ற இளைஞர் தன்னுடன் பழகிய 23 வயது பெண் ஒருவரை கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்துள்ளார். மேலும், அவரை பெல்ட்டால் அடித்து துன்புறுத்தியதோடு, பெண்ணின் கண்ணில் பசையை தடவி கொடுமை படுத்தியுள்ளார். 

இது குறித்து அந்த பெண், கடந்த வாரம் காவல்துறையில் புகார் அளித்தார். அதன் படி போலீசார் அயன் கானை கைது செய்தனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தியதில், அயன் கான் வீடு, சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டிருந்ததை அறிந்த அதிகாரிகள், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவருக்கு நோட்டீஸ் வழங்கினர். 

இதைத் தொடர்ந்து மேல் நடவடிக்கையாக நேற்று அதிகாரிகள் அவரது வீட்டை இடித்து தரைமட்டமாக்கினர். பலாத்கார குற்றவாளியின் வீட்டை இடித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்ட சம்பவத்துக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

house collapse in madhya pradhesh for harassment case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->