ஜம்மு காஷ்மீர் : பயங்கரவாதிகளின் பதுங்கு குழி அழிப்பு.! ஆயுதங்கள் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லை மாவட்டமான பூஞ்ச் ​​பகுதியில் நேற்று பயங்கரவாதிகளின் பதுங்கு குழியை அழித்த பாதுகாப்புப் படையினர், ஏராளமான ஆயுதங்கள், வெடி மருந்துகளை கைப்பற்றியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பூஞ்ச் மாவட்டத்தின் சுரன்கோட் தாலுகாவில் உள்ள பஹியன் வாலி கிராம பகுதியில் ஜம்மு காவல்துறையுடன் இணைந்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இந்த கூட்டு நடவடிக்கையின் போது பயங்கரவாதிகளின் பதுங்கு குழி மறைவிடத்தை அளித்துள்ளனர்.

இதையடுத்து அங்கிருந்து மூன்று ஏகே துப்பாக்கிகள், 10 கையெறி குண்டுகள் அடங்கிய பெட்டி, ஒரு கையெறி குண்டுகள் மற்றும் சில வெடி மருந்துகளை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். மேலும் இந்த நடவடிக்கையின் போது யாரும் கைது செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Huge cache of weapons seized from terrorist hideout in Jammu Kashmir Poonch


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->