சிக்கன் ரைஸ் வாங்கித்தர மறுத்த மனைவி - ஆத்திரத்தில் கணவர் செய்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


உத்தரப் பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் உள்ள பிரேம் நகர் காலனியில் வசித்து வருபவர் ஷாஹித் ஹுசைன். தையல்காரராக பணிபுரிந்து வரும் இவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு, சந்தையில் இருந்து பிரைடு சிக்கன் வாங்குவதற்காக மனைவி பானோவிடம் பணம் கேட்டுள்ளார். 

ஆனால், பானோ பணம் தர மறுத்த நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, சில நிமிடங்களுக்குப் பிறகு பானோ, வெளியே சென்று சிக்கன் வாங்கி வந்துள்ளார். 

இருப்பினும், இருவருக்கும் இடையே தகராறு தொடர்ந்ததையடுத்து ஒரு கட்டத்தில் ஹுசைன், கத்தரிக்கோலால் பானோவின் கழுத்தில் குத்தியுள்ளார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் பானோவை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

ஆனால், பானோ சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ஹுசைனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband kill wife in uttar pradesh for not buy chicken rice


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->