கண்டிஷன் போட்ட கணவர்; காப்பியில் விஷம் கலந்த மனைவி..! - Seithipunal
Seithipunal


உத்தரப் பிரதேசத்தில் முசாபர் நகரின் பகேலா கிராமத்தை சேர்ந்தவர் 30 வயதுடைய அனுஜ் சர்மா. இரண்டு வருடங்களுக்கு முன்பு 26 வயதுடைய பிங்கி என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. பிங்கி வேறொரு ஆணுடன் பேசுவதற்கு கணவர் அனுஜ் சர்மா எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால், இருவருக்கிடையேயும் அடிக்கடி வாக்குவாதம் நடந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி பிங்கி கணவர் அனுஜின் காபியில் விஷம் கலந்ததாக கூறப்படுகிறது. அதை குடித்த அனுஜின் உடல்நிலை மோசடமைந்துள்ளது. அதன் பின்னர் அவர் கட்டௌலியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால் வேறொரு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அனுஜின் சகோதரி பிங்கி மீது புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில், காலவத்துறையினர் வழக்குப்பதிவு செய்து,  தலைமறைவான பிங்கியை வலைவீசி தேடி வருகின்றனர்.

பிங்கிக்கு திருமணத்தின் முன்பே வெவேறு ஆணுடன் பழக்கம் இருந்ததாகவும் அவரின் விருப்பத்துக்கு மாறாக அனுஜ் உடன் திருமணம் செய்து வைக்கப்பட்டதாகவும் கிராமத்தினர் கூறுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Husband who imposed conditions Wife mixed poison in coffee


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->