கனமழை எதிரொலி: இடிந்து விழுந்த தடுப்புச் சுவர்! இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த பரிதாபம்.!
Hyderabad heavy rain wall collapses 7 dead
தெலுங்கானா, ஹைதராபாத்தில் உள்ள பாச்சுபல்லி பகுதியில் பெய்த கன மழை காரணமாக கட்டுமானத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 4 வயது குழந்தை உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். உயிரிழந்தவர்கள் ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் எனவும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இடுப்பாடுகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டிருந்த உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தெலுங்கானாவில் பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பேரழிவு நிவாரண படை குழுக்கள், நகரின் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள தண்ணீர் மற்றும் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Hyderabad heavy rain wall collapses 7 dead