ஐதராபாத் : வெளிநாட்டு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் கைது.! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத் பல்கலை கழகத்தில் பல்வேறு துறை சார்ந்த படிப்புகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. இந்த பல்கலைக்கழகத்தில் இந்தி துறையில் பேராசிரியராக இருப்பவர் ரவி ரஞ்சன். இவர் பல்கலைக்கழகத்தின் அருகிலேயே தங்கியுள்ளார். 

இந்நிலையில், இந்த பல்கலைக்கழகத்தில் தாய்லாந்து நாட்டை சேர்ந்த 23 வயது மாணவி ஒருவர் முதுநிலை படிப்பில் சேர்ந்துள்ளார். அவரை இந்தி கற்பதற்காக தனது இல்லத்திற்கு வரும்படி பேராசிரியர் அழைத்துள்ளார். அந்த மாணவியும் படிக்கும் ஆர்வத்தில் அவர் வீட்டிற்குச் சென்றுள்ளார். 

அங்கு மாணவிக்கு மதுபானம் கொடுத்து பேராசிரியர் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். இதனால், மனஉளைச்சலுக்கு ஆளான மாணவி இந்த சம்பவம் குறித்து சக மாணவிகளிடம் தெரிவித்துள்ளார். 

அவருக்கு ஆங்கிலத்தில் சரியாக பேச தெரியவில்லை, ஆன்லைன் வழியே செயலி ஒன்றை பயன்படுத்தி சம்பவம் பற்றி தெரிவித்துள்ளார். உடனடியாக அந்த மாணவியை சக மாணவிகள் பல்கலை கழகத்தில் உள்ள சுகாதார மையத்திற்கு அழைத்து சென்று, பரிசோதனை செய்துள்ளனர். அதன் பின்னர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து மத்திய பல்கலை கழகத்தின் வெளிநாட்டு பரிமாற்ற திட்ட இயக்குனரும் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக, மாணவியிடம் இருந்து வாக்குமூலம் பெறப்பட்டது. 

மேலும், கல்லூரி வளாகத்திற்கு வெளியே மாணவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேராசிரியர் ரவி ரஞ்சன் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hydrabad university professor arrested for sexual harassment case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->