டீ,பிஸ்கட்யுடன் ஐ ஆம் வெயிட்டிங் ! அமலாக்கத்துறையினர் வருக வருக - ராகுல்காந்தி! - Seithipunal
Seithipunal


எனது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 23ஆம் தேதி 2024-25 அஞ்சாம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மதியன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்திற்கு சரியாக நிதி ஒதுக்கவில்லை என பெரும் கண்டனங்கள் எழுந்தன. ஆட்சியை தக்க வைக்க உதவிய சந்திரபாபு நாயுடுக்கும் நிதீஷ் குமாருக்கும் அதிக நிதி ஒதுக்கியதாக குற்றம் சாட்டினார்கள்.

இந்த நிலையில், பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நாடாளுமன்றத்தில் சக்கர வியூகம் குறித்த எனது பேச்சுக்காக எனது வீட்டில் அமலாக்கதுறை சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அமலாக்கத் துறையினரின் வருகைக்காக தேநீர் மற்றும் பிஸ்கட்டுடன் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

I am waiting for the enforcement department to come to my house with tea and biscuits Rahul Gandh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->