மன்னர்கள் போன்று.. பிரதமர் மோடியும்.. புகழ்ந்து தள்ளிய இளையராஜா.!! - Seithipunal
Seithipunal


உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு இன்று திறக்கப்பட்ட ராமர் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி முதல் ஆளாக ராமருக்கு பூஜை செய்து வழிபட்டார்.

இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பல கோடி மக்கள் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை தொலைக்காட்சி நீரலை வாயிலாக கண்டுகளித்தனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற நியமன எம்பியும் இசையமைப்பாளருமான இளையராஜா "ராமர் பிறந்த இடத்திலேயே ராமருக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. இதற்காக பிரதமர் மோடியை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

மன்னர்கள்தான் கோவிலைக் கட்டினார்கள், தற்போது பிரதமர் மோடி கோவிலைக் கட்டியுள்ளார். இது இந்தியா முழுவதற்குமான கோவில்" என பிரதமர் நரேந்திய மோடியை புகழ்ந்து தள்ளியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ilayaraja praised PM narendra Modi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->