வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் - மார்ச் 24, 25 வங்கிகள் செயல்படுமா?
march 24 and 25 bank employees strike
நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 24, 25ம் தேதிகளில் வங்கிகளில் வேலை நிறுத்தம் மேற்கொள்ள இருப்பதாக வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.
அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு, வங்கி ஊழியர் தேசிய கூட்டமைப்பு உட்பட பல சங்கங்கள் இணைந்த, வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கடந்த சில நாட்களாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதிலும் குறிப்பாக 'வங்கிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த தேவையான ஊழியர்களை நியமிக்க வேண்டும்; தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும்;
பழைய பென்ஷன் திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்த வேண்டும்; வங்கிகளுக்கு வாரத்துக்கு ஐந்து நாட்கள் பணி நாளாக அறிவிக்க வேண்டும்' என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை, இவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
நாடு முழுவதும் ஒரு கட்டமாக, மார்ச் 3ம் தேதி பார்லிமென்ட் முன்பு தர்ணா நடத்தவும், மார்ச் 24, 25ம் தேதிகளில் நாடு தழுவிய வங்கிகள் வேலை நிறுத்தம் மேற்கொள்ளவும், முடிவு செய்துள்ளனர்
English Summary
march 24 and 25 bank employees strike