மைசூர் பருப்பு என கூறி பச்சை பட்டாணி இறக்குமதி.. 3 சுங்கத்துறை அதிகாரிகளின் மோசடி அம்பலம்!
Import of green peas as Mysore dal Fraud of 3 Customs officials exposed!
மைசூர் பருப்பு என்று கூறி முறைகேடாக பச்சை பட்டாணியை இறக்குமதி செய்தது தெரியவந்துள்ளது.இது தொடர்பாக 3 சுங்கத்துறை அதிகாரிகள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்தியாவில் கொல்கத்தா துறைமுகம் வழியாக மட்டுமே பச்சை பட்டாணியை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், துபாயிலிருந்து சென்னை துறைமுகம் வழியாக ரூ. 2 கோடி மதிப்புடைய பச்சை பட்டாணியை இறக்குமதி செய்த விவகாரத்தில் 3 சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.அவர்கள் மைசூர் பருப்பு எனக் கூறி ரூ.2 கோடி மதிப்புள்ள பச்சை பட்டாணியை போலி ஆவணங்கள் மூலம் இறக்குமதி செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மைசூர் பருப்பு என்று கூறி முறைகேடாக பச்சை பட்டாணியை இறக்குமதி செய்தது வருவாய் புலனாய்வு போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இந்தநிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 அதிகாரிகளை கைது செய்தனர். மேலும் டெல்லியை சேர்ந்த ஏற்றுமதி இறக்குமதியாளர்களான மேலும் 2 பேரையும் கைது செய்துள்ளர்.மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மைசூர் பருப்பு என்று கூறி முறைகேடாக பச்சை பட்டாணியை இறக்குமதி செய்தது இது தொடர்பாக 3 சுங்கத்துறை அதிகாரிகள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Import of green peas as Mysore dal Fraud of 3 Customs officials exposed!