இந்தியாவின் இரண்டு மாநிலங்களை உலுக்கிய நிலநடுக்கம்.! பதறிப்போன மக்கள்..!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் பலவிதமான விபத்துகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பரிதாபமாக தங்களது உயிர்களையும் உடமைகளையும் இழந்து தவித்து வரும் நிலையில்., தங்களின் நெருக்கமான குடும்ப உறுப்பினர்களை இழந்து பெரும் சோகத்தில் ஆழ்ந்து வருகின்றனர். 

இந்த நிலையில்., இயற்கை சீற்றங்களான நிலநடுக்கம்., சுனாமி மற்றும் மழை பெருவெள்ளம்., வறட்சி என பலவிதமான பாதிப்புகளால் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில்., நிலநடுத்தட்டுகளுக்கு அருகில் இருக்கும் பகுதிகளில் அவ்வப்போது நிலநடுக்கம் தொடர்ந்து ஏற்படுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. 

அவ்வாறு ஏற்படும் நிலநடுக்கத்தின் விளைவாக கட்டிடங்கள் மற்றும் வணிக வளாகங்கள் என அனைத்தையும்., தனது சக்தியால் அழித்து., பெரும் பொருட் சேதத்தையும் பல உயிர்சேதங்களையும் ஏற்படுத்திவிடுகிறது. இது மட்டுமல்லாது இந்தோனேசியா., ஜப்பான்., அமெரிக்கா போன்ற பகுதிகளில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கை ஆகிவிட்டது. 

assam, assam state images, அசாம், அசாம் மாநிலம்,

இந்த நிலையில்., கடந்த சில வருடங்களாக இந்தியாவிலும் நிலநடுக்கம் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ள நிலையில்., அசாமில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அசாமில் இன்று அதிகாலை உள்ளூர் நேரப்படி காலை 7 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவாகி உள்ள நிலையில்., இது குறித்த விவரங்கள் எதுவும் தற்போது சரிவர தெரியவில்லை. 

மேலும் இந்தியாவின் வடக்கு பகுதியில் இருக்கும் இமாச்சலப் பிரதேசத்தில் இன்று அதிகாலை 12.05 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம்., ரிக்டர் அளவுகோலில் 4.4 அளவில் பதிவாகியுள்ளதாக தகவல்கள்  வெளியாகியுள்ளது. மேலும்., இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

in india assam and himachal predesh have earthquake


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->