டெல்லிக்கு படையெடுக்கும் I.N.D.I கூட்டணி தலைவர்கள்.. போலீசார் குவிப்பு.!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் 28 எதிர் கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணியின் பிரம்மாண்ட பேரணி இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. டெல்லியில் உள்ள ராமனிடம் மைதானத்தில் "லோக்தந்த்ரா பச்சாவ் பேரணி" என்ற பெயரில் பேரணி நடைபெறுகிறது. இந்த பேரணியின் முடிவில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்றிணைந்து மிகப்பெரிய பொதுக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். 

அதன்படி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தாள தலைவர் தேஜாஸ்வி யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டெரிக் ஓ பிரைன், திமுக சார்பில் திருச்சி சிவா, தேசிய மாநாட்டு கட்சியைச் சேர்ந்த பருக் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த மெகபூபா முக்தி, ஜார்க்கண்ட் முதலமைச்சர் சம்பாய் சோரன், ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் அவர்களின் மனைவி கல்பனா சோரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

நாடு முழுவதிலும் இருந்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் இந்த பிரம்மாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கால் ராம்லீலா மைதானத்தில் ஒவ்வொரு வாயிலிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு சோதனைக்கப்பின். மேலும் பாதுகாப்பு பணியில் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள் அமைந்துள்ள டிடியூ மார்க்கில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பேரணியில் 20 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது ஆனால் 30 ஆயிரம் பேர் வரை பங்கேற்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராமிலா மைதானத்தைச் சுற்றி சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு ஒவ்வொரு அசைவையும் காவல்துறையினர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இதில் விதிமீறல் ஏதேனும் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி காவல்துறை எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indi alliance mega rally against Modi govt in Delhi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->