காணாமல் போன 3 லட்சம் குழந்தைகள்! மத்திய அரசின் அதிர்ச்சி அறிக்கை!
India 3 laks Childs missing Central Govt
இந்தியாவில் கடந்த நான்கு ஆண்டுகளில் காணாமல் போன 3 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளில் 36,000 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
வழக்கு பின்னணி:
குழந்தை கடத்தல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, சதீஷ் சந்திர சர்மா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
வழக்கறிஞர் அபர்ணா பட், குழந்தைகள் கடத்தல் வழக்குகளை மாநில எல்லைகளைத் தாண்டும் தொந்தரப்புகளால், தேசிய அமைப்புகளான சிபிஐ போன்றவற்றிடம் ஒப்படைக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
3 லட்சம் குழந்தைகள்:
மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி, 2020 முதல் மொத்தமாக 3 லட்சம் குழந்தைகள் காணாமல் போன நிலையில், பெரும்பாலானோரை மீட்டுள்ளதாக தெரிவித்தார். ஆனால், 36,000 குழந்தைகள் இன்னும் காணவில்லை.
பெற்றோர்கள் புகார் அளித்தும் 4 மாதங்களாக குழந்தைகளை கண்டுபிடிக்க முடியாவிட்டால், அந்த வழக்குகளை மனித கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், மாவட்டந்தோறும் மனித கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
வட மாநிலங்கள்:
மத்தியப் பிரதேசம், பீகார், ஒடிசா போன்ற மாநிலங்களில் குழந்தைகள் அதிகமாக காணாமல் போயுள்ளனர். உச்சநீதிமன்றம், குழந்தை கடத்தலை தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை மேலும் விளக்கிக் கொள்ள விரும்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
English Summary
India 3 laks Childs missing Central Govt