தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை புறக்கணிக்க காரணம் தெரிவித்த INDIA கூட்டணி!  - Seithipunal
Seithipunal


பாராளுமன்ற தேர்தலில் பா. ஜனதாவை தோற்கடிக்க 26க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து INDIA என்ற கூட்டணி உருவாக்கியது. 

டெல்லியில் நேற்று இந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. 3 கூட்டங்கள் நடத்தப்பட்ட பின் இந்த குழு கூடிய இடத்தில் அடுத்தபடியாக தொகுதி பங்கீடு தான் முக்கிய இலக்கு என தெரிவித்தது. 

இந்நிலையில் சில தொலைக்காட்சிகளில் தொகுப்பாளர்கள் மற்றும் நிகழ்ச்சியை புறக்கணிக்க இருப்பதாகவும் INDIA கூட்டணி தெரிவித்துள்ளது. 

தொடர்ந்து ஊடகத்தின் ஒரு பிரிவினர் விரோத போக்கை கடைபிடித்து வருவதாகவும் ராகுல் காந்தியின் நடைபயணம் மிகக் குறைந்த அளவில் காட்டப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

ராகுல் காந்த யாத்திரைக்கு மக்கள் ஆதரவளித்து வருவது போல் சமூக வலைதளங்களிலும் ஆதரவு கிடைத்துள்ளது. ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட், முக்கியமான மீடியா எங்களை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என தெரிவித்துள்ளார். 

மேலும் யாத்திரையை செய்தி ஆசிரியர் புறக்கணிக்கிறார் என்பது எனது குற்றச்சாட்டாக உள்ளது. நீங்கள் இது போன்ற பிரச்சாரத்தை காட்ட மாட்டீர்களா என கேள்வி எழுப்பியதற்கு, இது போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கடந்த 2019 ஆம் ஆண்டு ஒரு மாத காலம் வரை காங்கிரஸ் புறக்கணித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

இது குறித்து காங்கிரஸ் தலைவர் சந்தீப் சுர்ஜேவாலா தனது ட்விட்டர் பக்கத்தில், 'தங்களது செய்தி தொடர்பாளர்களை காங்கிரஸ், தொலைக்காட்சி நிகழ்சிகளுக்கு அனுப்பாது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

அனைத்து மீடியா மற்றும் எடிட்டர்கள் காங்கிரஸ் பிரதிநிதியாக யாரையும் அழைக்க வேண்டாம்' என பதிவிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

INDIA alliance reasons  for boycotting television programs


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->