இந்தியா-சீனா போர்!...அசாமில் பதற்றம்!...62 ஆண்டுகளுக்கு பிறகு புகை குண்டு வெடிப்பு!
India China war Tension in Assam Smoke explosion after 62 years
இந்தியா-சீனா இடையேயான போரின்போது தயாரிக்கப்பட்ட புகை குண்டு ஒன்று, அசாமில் கண்டெடுக்கப்பட்ட நிலையில் புகை குண்டு பாதுகாப்பாக வெடிக்க வைக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.
போரில் எதிரிகளின் பார்வையில் இருந்து தப்புவதற்காக ஒரு புகைத் தடுப்பை ஏற்படுத்த புகைகுண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கிடையே இந்தியா-சீனா இடையே கடந்த 1962-ம் ஆண்டு போர் நடைபெற்றது. இந்த போரின் போது தயாரிக்கப்பட்ட ஒரு புகை குண்டு, அசாம் மாநிலம் சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள தேக்கியாஜுலி என்ற பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தேக்கியாஜுலிஅருகே உள்ள சேசா ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒருவர், புகை குண்டை கண்டெடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புகை குண்டு குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், புகை குண்டுவை கைப்பற்றி கொண்டு சென்றனர்.
பின்னர் ராணுவ அதிகாரிகளின் முன்னிலையில் புகை குண்டு பாதுகாப்பாக வெடிக்க வைக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தியா 1947ம் ஆண்டு விடுதலையான பின்னரும் அண்டை நாடுகளுடன் போரில் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
India China war Tension in Assam Smoke explosion after 62 years