துருக்கி தலைநகரில் குண்டுவெடிப்பு: 6 பேர் பலி - இந்தியா இரங்கல்
India condolence to turkey Istanbul bomb blast killed 6
துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள பரபரப்பான கடை வீதியான இஸ்திக்லால் பகுதியில் நேற்று மாலை குண்டுவெடுப்பு நிகழ்ந்துள்ளது. இந்த பரபரப்பான வீதியில் ஏராளமான உணவகங்கள் மற்றும் பல கடைகள் உள்ளன.
மேலும் வார இறுதி நாள் என்பதால் ஏராளமானோர் கடைவீதியில் திரண்டு இருந்த நிலையில், இந்த பயங்கர குண்டு வெடிப்பில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 81 பேர் காயமடைந்துள்ளனர். இதற்கு முன்பு இங்கு 2015 மற்றும் 2017ல் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன.
இந்நிலையில் இஸ்தான்புல் நகரத்தில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு இந்தியா இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தாம் பக்ஷி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில்,
இஸ்தான்புல் நகரில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்காக துருக்கி அரசுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் இந்தியா தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. காயமடைந்தவர்களுக்கும் எங்களது அனுதாபங்கள். அவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
India condolence to turkey Istanbul bomb blast killed 6