சீன கப்பல் வருகைக்கு முன்பாகவே இலங்கைக்கு கண்காணிப்பு விமானத்தை வழங்கிய இந்தியா - Seithipunal
Seithipunal


இந்தியாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் 'யுவான் வாங்-5' உளவு கப்பல் நாளை வருகை தர உள்ளது.

இதனிடையே இலங்கைக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ள இந்திய கடற்படையின் துணைத்தலைவர் வைஸ் அட்மிரல் எஸ்.என்.கோர்மேட், இந்திய தூதர் கோபால் பாக்லேவை கொழும்பில் சந்தித்தார்.

இதனை தொடர்ந்து இந்தியாவால் நன்கொடையாக வழங்கப்பட்ட டோர்னியர் -228 என்ற கடல்சார் கண்காணிப்பு விமானம் இலங்கையின் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே முன்னிலையில் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் இலங்கை விமானப்படைக்கு இந்தியா டோர்னியர் விமானத்தை பரிசாக வழங்கப்பட்டிருப்பது, கடல்சார் பாதுகாப்பு மற்றும் அதன் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு நடவடிக்கையாகும்.

இந்தியாவின் பலம் அதன் நட்பு நாடுகளின் பலத்தையும் அதிகரிக்கும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்று இந்திய தூதர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

மேலும் சீனாவின் உளவு கப்பல் வருகைக்கு முன்பாக, இந்தியாவின் உளவு விமானம் டோர்னியர்-228 இலங்கைக்கு வழங்கியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India gifts dornier 228 to srilanka ahead of China ship arrival


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->