இன்று நமது நாட்டின் 75 ஆவது சுதந்திர தினம்.. அதன் சிறப்புகள் என்னென்ன.? - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் 75வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்னரே சுதந்திர தின கொண்டாட்டம் ஆரம்பமாகிவிட்டது என்பதும், இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரின் வீட்டிலும் சுதந்திர கொடியை ஏற்றி வைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதற்கிணங்க பலர் சுதந்திர கொடியை வீடுகளில் ஏற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள நகரங்கள், கிராமங்கள் உட்பட பல பகுதிகளில் சுதந்திர தின கொண்டாட்டம் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.

200 ஆண்டுகளுக்கு மேலாக ஆங்கிலேயர்களால் அடிமைப்பட்டு கிடந்த இந்தியா பல்வேறு தியாகங்கள், போராட்டங்களுக்கு பிறகு சுதந்திரம் பெற்றது. இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இந்தியா சுதந்திரத்தை பெற நம் முன்னோர்கள் அனுபவித்த துயரங்களும், இன்னல்களும் நாம் படித்ததை விட மிகவும் கொடுமையானவை. அவ்வாறு போராடிய லட்சக்கணக்கான தியாகிகளில் ஒரு சிலரை இன்று நினைவுக்கூறுவோம்.

காந்தி :

இந்தியாவின் சுதந்திரத்தை ஏற்று நடத்திய பெருமை மகாத்மா காந்தியை சாரும். அகிம்சை வழியில் உப்பு சத்தியாகிரகம் எனும் போராட்டம் இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் மிகவும் முக்கியமானது.

நேதாஜி :

ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா சுதந்திரம் அடைய வேண்டும் என்று நினைத்து போர் நடத்தி, அதற்காக இந்திய ராணுவத்தை உருவாக்கி இந்தியாவை ஆட்சிசெய்து கொண்டிருந்த ஆங்கிலேயரை எதிர்த்து தாக்குதல் நடத்தியவர்.

வ.உ.சி :

வணிகம் மூலம் தான் ஆங்கிலேயர் நம் தாய் நாட்டிற்கு வந்தது அனைவரும் அறிந்தது. மிக சிறந்த வழக்கறிஞர் வ.உ.சிதம்பரம்பிள்ளை ஆங்கிலேயரின் அஸ்திவாரமான அவர்கள் வணிகத்திலேயே கை வைக்க ஆரம்பித்தார்.

வீரபாண்டிய கட்டபொம்மன் :

ஆங்கிலேயர்களுக்கு வரி கட்ட மறுத்த இந்த தன்மான தலைவன் வீரத்துடன் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு 1799-ல் கொல்லப்பட்டார்.

திருப்பூர் குமரன் :

ஆங்கிலேய போலீஸாரின் தாக்குதலையும் தாங்கிக்கொண்டு, நமது தேசிய கோடி கீழே விழாமல் பிடித்திருந்தமையால், கொடி காத்த குமரன் என்ற பெயர் வந்தது. அந்த சம்பவத்தின் போது உயிர் பிரிந்தும் கூட மூவர்ண கோடியை கீழே விழாமல் தாங்கிப் பிடித்திருந்தது இவரது கைகள்.

மருது பாண்டியர் :

மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்திற்கு முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள்.

புலித்தேவன் :

இந்திய விடுதலை வரலாற்றில் 'வெள்ளையனே வெளியேறு" என்று முதன் முதலாக 1751ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர் புலித்தேவன்.

இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த எண்ணற்ற பல வீரர்களை இந்நாளில் நினைவுக்கூர்ந்து வீரவணக்கம் செலுத்துவோம் ஜெய்ஹிந்த்.!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India independence day special


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->