இந்தியாவுக்கு நுழைந்தது கொடூர நோய் - மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல்!
india Monkeypox Mpox Health Ministry
இந்தியாவில் ஒருவருக்கு எம்-பாக்ஸ் (குரங்கு அம்மை) அறிகுறி இருப்பதாக, மத்திய சுகாதாரக் சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
அறிகுறி உள்ள நபர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்ட உள்ளதாகவும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது .
ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவிவரும் குரங்கம்மை எனப்படும் எம்பாக்ஸ் தொற்று நோய், உலகின் பல்வேறு நடிக்குகளிலும் தற்போது பரவ தொடங்கியுள்ளது.
இந்தியாவில் இந்த நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அனைத்து மாநிலங்களையும் உஷார்படுத்தி, அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நம் தமிழகத்திலும் விமான நிலையத்தில் பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை உத்தரவிட்டது.
இந்த நிலையில், குரங்கம்மை நோய் பாதிப்புள்ள நாட்டில் இருந்து வந்தவருக்கு அறிகுறி காணப்பட்டு உள்ளதாகவும், குரங்கம்மை நோய் அறிகுறிகளுடன் வந்த பயணி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
English Summary
india Monkeypox Mpox Health Ministry