அமெரிக்காவிடமிருந்து 30 எம்.க்யூ-9பி ஆளில்லா விமானங்களை வாங்க இந்தியா பேச்சு வார்த்தை
India planned to buy 30 MQ9B drones for 3 billion
இந்தியா சீனாவின் எல்லையிலும் இந்தியப் பெருங்கடல் பகுதியிலும் கண்காணிப்பை மேம்படுத்துவதற்காக அமெரிக்காவிடம் இருந்து ட்ரோன்களை வாங்க திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் காபுல் தாக்குதலில் முக்கிய பங்கு வகித்த எம்.க்யூ-9பி வகையைச் சார்ந்த 30 ட்ரோன்களை 3 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.
இதையடுத்து எம்.க்யூ-9பி ஆளில்லா விமானங்களை அமெரிக்காவிடமிருந்து கொள்முதல் செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளதாக ஜெனரல் அணுக்கள் குளோபல் கார்ப்பரேஷனின் தலைமை நிர்வாகி டாக்டர் விவேக் லால் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆயுதங்களுடன் செயல்படும் இந்த ட்ரோன்களை கடல்சார் கண்காணிப்பு, தரை நிலை தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு இந்தியா ஈடுபடுத்த உள்ளது.
English Summary
India planned to buy 30 MQ9B drones for 3 billion