"மேக் இன் இந்தியா".. திட்டத்தின் மூலம் ஆயுத ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு முடிவு..! - Seithipunal
Seithipunal


வெளிநாட்டு ஆயுதங்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்காக மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டு ஆயுதங்களின் உற்பத்தியை பெருக்குவதற்கும், ஏற்றுமதியை அதிகரிக்க செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக ஏ.என்.ஐ வெளியிட்ட அறிக்கையில் ராணுவ விவகாரங்கள் துறையும், பாதுகாப்புத் துறையும் பல்வேறு புதிய சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகின்றன. மேலும் பொது மற்றும் தனியார் துறைகளின் பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் ஆயுதங்களை ஏற்றுமதி அதிகரிக்க திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், அடுத்த இரண்டு ஆண்டிற்குள் இந்தியாவின் ஆயுத ஏற்றுமதியை கிட்டத்தட்ட 5 பில்லியன் டாலராக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India plans export weapons through make in india


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->