என்னது பேச்சு சுதந்திரத்தில் இந்தியாவுக்கு 24 வது இடமா? - ஆய்வில் பின்தங்கிய இந்தியா - Seithipunal
Seithipunal


கருத்து மற்றும் பேச்சு சுதந்திரம் குறித்து 33 நாடுகளில் ஆய்வு நடத்தப்பட்டதில் இந்தியா 24வது இடத்தைப் பிடித்துள்ளது. இது அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் 'Future Free Speech' என்னும் அமைப்பு பேச்சு சுதந்திரம் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது.

இதில் இந்தியா 62.6 மதிப்பெண் பெற்றுள்ளது கவலையளிக்கிறது. பேச்சு சுதந்திர பட்டியலில் நார்வே (87.9), டென்மார்க் (87.0), ஹங்கேரி (85.5) ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களிலுள்ளன.

சர்வாதிகார போக்கு நாடுகள்:

குறிப்பாக இதில் ஹங்கேரி (85.5) மற்றும் வெனிசுலா (81.8) போன்ற சில சர்வாதிகார போக்கு நிலவும் நாடுகள் கூட பேச்சு சுதந்திரத்தில் இந்தியாவை  விட நல்ல நிலையில் முன்னிலையில் இருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

மேலும் அமெரிக்கா, இஸ்ரேல், ஜப்பான் போன்ற நாடுகளில் மிகப்பெரிய சரிவைக் கண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அரசின் கொள்கைகளை விமர்சிப்பது குறித்த பேச்சு சுதந்திரம் உலக சராசரியைக் காட்டிலும் இந்தியாவில் குறைவாகவே உள்ளது.

மேலும் தனிப்பட்ட பேச்சு, ஊடகம் மற்றும் இணையம் தொடர்பான தணிக்கை ஆகியவை இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.தற்போது இந்த பட்டியல் சற்று கவலையளிக்கிறது என நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறன்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India ranked 24th in freedom of speech lags behind in survey


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->