சாதிவாரி மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு உடனடியாக நடத்த வேண்டும் என திருமாவளவன் பேச்சு..!
Thirumavalavan speech that caste wise and population census should be conducted immediately
மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்துவதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும் எனவும் அது சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்தே நடத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், ''மக்கள் தொகை கணக்கெடுப்புக் குறித்து இந்த அவையின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது வழக்கமான ஒன்று எனவும், கடந்த 2021-ஆம் ஆண்டு எடுக்கப்பட்டிருக்க வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு கொரோனா கொடுந்தொற்றின் காரணமாக தள்ளிப் போய்விட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இது குறித்து மத்திய அரசு எந்த முனைப்பையும் காட்டாமல் அமைதிகாப்பது அதிர்ச்சி அளிக்கிறது எனவும், மக்கள் தொகை கணக்கெடுப்பில்லாமல் வளர்ச்சி திட்டங்களையோ நலிந்த மக்களுக்கான நலத்திட்டங்களையோ நடைமுறைப்படுத்த முடியாது என்பதை இந்த அரசு நன்கு அறியும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான மறுவரையறை செய்யப்பட வேண்டுமானால் மக்கள் தொகை கணக்கெடுப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்றும் திருமா வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், மகளிருக்கான இடஒதுக்கீடு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமானால் மக்கள் தொகை கணக்கெடுப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும், மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்துவதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும் எனவும், அது சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்தே நடத்த வேண்டும் என்றும் அவர் பேசியுள்ளார்.
English Summary
Thirumavalavan speech that caste wise and population census should be conducted immediately