70 வயது பாட்டியை சாப்பாடு வாங்கித் தருவதாக அழைத்து சென்று பாலியல் துஷ்பிரயோகம்..!
70 year old old woman sexually abused on the pretext of buying her food
கர்நாடக மாநிலத்தில் 70 வயது மூதாட்டியை சாப்பாடு வாங்கித் தருவதாக கூறி நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்வபம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் தாலுகா கட்டமாதங்கலா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பல்லகிரி கிராமத்தை சேர்ந்த ஆனந்துக்கு திருமணமாகி மனைவி, 02 குழந்தைகள் உள்ளனர்.

அதேப்பகுதியில் வசித்து வரும் 70 வாய்த்து மூதாட்டி, ஆனந்திடம் மூதாட்டி சாப்பாடு கேட்டுள்ளார். அப்போது தன்னுடன் வந்தால் ஓட்டலில் சாப்பாடு வாங்கி தருவதாக ஆனந்த் கூறி உள்ளார். இதனை நம்பி ஆனந்துடன் மூதாட்டி சாப்பாடு வாங்க சென்றுள்ளார். ஆனால், ஆனந்த் மூதாட்டியை ஓட்டலுக்கு அழைத்து செல்லாமல், அங்குள்ள தோட்டத்து வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு அவர் மூதாட்டியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த அதிர்ச்சி அடைந்த மூதாட்டி, கத்தி கூச்சலிட்டுள்ளார். மூதாட்டியின் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்து தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தவர்கள் விரைந்து வந்துள்ளனர்.

அப்போது சுதாகரித்துக்கொண்ட ஆனந்த் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அப்போது, மூதாட்டி, ஆனந்த் சாப்பாடு வாங்கி தருவதாக தோட்டத்து வீட்டுக்கு அழைத்து பலாத்காரம் செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள் கட்டமாதங்கலா போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். இதன் பின்னர் அவர்கள் மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஆனந்தை கைது செய்துள்ளனர்.
English Summary
70 year old old woman sexually abused on the pretext of buying her food