''மாநிலங்களை அழிக்கும் பாசிச பாஜக ஆட்சியை ஒழித்தாக வேண்டும்; கூட்டாட்சி என்ற சொல்லே மத்திய அரசுக்கு அலர்ஜி" மு.க.ஸ்டாலின் ..!
The fascist BJP regime that is destroying the states should be abolished the central government is allergic to the word federalism CM Stalin
மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டின் 02-வது நாளாக இன்றும் (வியாழக்கிழமை) பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.
'கூட்டாட்சி கோட்பாடே இந்தியாவின் வலிமை' என்ற தலைப்பில் மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாடு மாலை 05 மணிக்கு தொடங்கியது. இதில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடக மாநில வருவாய்த்துறை மந்திரி கிருஷ்ண பைரே கவுடா உள்ளிட்டோர் அதில் கலந்துகொண்டுள்ளனர்.

இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் மேலும் கூறியதாவது:- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டின் காரணமாக தூங்கா நகரமான மதுரை சிவப்பு நகரமாக மாறியுள்ளது. திமுக கூட்டணியில் பிளவு ஏற்படாதா என நினைத்து கொண்டிருப்பவர்களின் எண்ணம் ஈடேறாது என தெரிவித்தார்.
அத்துடன், கூட்டாட்சி என்ற சொல்லே மத்திய ஆட்சியாளர்களுக்கு அலர்ஜி ஆகிவிட்டது என குறிப்பிட்டார். மேலும், மத்திய அரசால் அதிக பாதிப்பு அடைவது நானும், கேரள முதல்வரும்தான் என்றும், எங்கள் பேச்சுக்களை வாக்குமூலமாக எடுத்துக் கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், மாநிலங்களை அழிக்கும் பாசிச பாஜக ஆட்சியை ஒழித்தாக வேண்டும் எனவும், எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் முழுநேர அரசியல் வாதியாக செயல்பட வைக்கிறார்கள் என்றும், மாநிலங்களே இருக்க கூடாது என நினைக்கிறார்கள். வக்ஃப் சட்டத்தை நள்ளிரவில் நிறைவேற்றி உள்ளார்கள் எனவும் தெரிவித்தார்.
அத்துடன், கூட்டாட்சி தத்துவத்தை தொகுதி மறுசீரமைப்பு மூலம் சிதைக்க நினைக்கிறார்கள். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டும்தான் இந்தியாவில் சுயாட்சிகாப்பாற்றப்படும் என்றும் மேலும் அவர் குறிப்பிட்டார்.
English Summary
The fascist BJP regime that is destroying the states should be abolished the central government is allergic to the word federalism CM Stalin