ராகுல்காந்திக்கு ஆதரவு - முதல் ஆளாக ஆதரவை நீட்டிய தலைவர்! அதிரும் அரசியல் களம்! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த மக்களவை பொதுத் தேர்தலில் முடிவுகளின்படி, பாஜக கூட்டணி 290 க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று, கூட்டணி ஆட்சியை அமைக்க ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறது. 

பாஜக மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைக்க வேண்டும் என்றால், முக்கியமாக தெலுங்கு தேசம் மற்றும் ஜனதா தல் கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது. மேலும் நிபந்தனையற்ற அல்லது நிபந்தனை உடன் கூடிய ஆதரவை இந்த இரு கட்சிகளும் இன்று மாலை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் கூடிய சீக்கிரமே புதிய மத்திய அமைச்சரவை பதவி ஏற்க உள்ளதாகவும் அதற்குண்டான ஏற்பாடுகளும் நடந்து வருவதாக டெல்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதற்காக இன்று மாலை பாஜக தனது கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளாது.

இந்த மக்களைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சுமார் 234 க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

மேலும், பாஜகவில் இடம் பெற்றுள்ள தெலுங்கு தேசம் ஜனதா தன் உள்ளிட்ட முக்கிய சில கட்சிகளை தங்களது கூட்டணியில் இணைத்து, மத்தியில் ஒரு கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் கட்சி முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதற்கான பேச்சுவார்த்தைகள் நேற்று மதியமுதலே தொடங்கி உள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனா உத்தவ் தாக்குரே, பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை ஆதரிப்பதாக தனது ஆதரவை  அறிவித்துள்ளார். 

மேலும், சில கட்சித் தலைவர்களும் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்தி, மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு உண்டான பணிகளை தொடங்கி உள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

INDIA Shiv Sena Udhav support to Rahul for PM Candidate


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->