#BREAKING :: கார் விபத்தில் சிக்கினார் ரிஷப் பந்த்..!! அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி..!! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் உத்தரகாண்டில் இருந்து டெல்லியை நோக்கி காரில் தனது குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாடுவதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது ரூர்க்கியின் நர்சன் எல்லையில் ஹம்மத்பூர் ஹால் பகுதியில் டெல்லி-டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்று கொண்டிருக்கும் பொழுது சாலையோர தடுப்புச் சுவர் மீது ரிஷப் பந்த் என்ற கார் மோதியதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சிக்கிய கார் தீப்பிடித்து எரிந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக ரிஷப் பந்த் உயிர்த்தப்பினார். கார் விபத்தில் பலத்த காயம் அடைந்த ரிஷப் பந்த் ரூர்க்கீயில் உள்ள சக்சாம் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் தற்பொழுது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்பொழுது ரிஷப் பந்த் உடல்நிலை சீராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்தில் ரிஷ ப்பந்திற்கு தலை, முதுகு மற்றும் கால் மூட்டில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian cricket player Rishabh Pant met with car accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->