"இந்தியாவின் ஹெல்மெட் மனிதர்" - மூன்று மாநில அரசின் பாராட்டு! மத்திய அமைச்சர், நடிகர் சோனு சூட்டின் வாழ்த்து!  - Seithipunal
Seithipunal



பீகார் மாநில அரசால் இந்தியாவின் ஹெல்மெட் மனிதர் என்ற பட்டத்தை பெற்றுள்ள நபரின் வாழ்க்கை பின்னணி, தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. அப்படி என்ன சாதனை செய்தார் அவர்? 

பீகார் மாநிலம், மதுபானி பகுதியை சேர்ந்தவர் ராகவேந்திர குமார். கடந்த 2014 ஆம் ஆண்டு யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் இவரின் நண்பர் கிருஷ்ணகுமார் இருசக்கர வாகனத்தில் சென்றபோது லாரி மோதி படுகாயம் அடைந்தார்.

ஹெல்மெட் அணியாத கிருஷ்ணகுமாரின் தலையில் படுகாயம் அடைந்ததால், அவர் ஒரு சில நாட்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நண்பன் கிருஷ்ணகுமார் ஹெல்மெட் அணியாததால் உயிரிழந்த சம்பவம் ராகவேந்திர குமாரை பெரிதும் பாதித்தது. 

உடனடியாக ஹெல்மெட் கடைக்கு சென்று அனைத்து ஹெல்மெட்களையும் வாங்கிய ராகவேந்திர குமார், யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் பயணிக்கும் ஹெல்மெட் அணியாக இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி, அவர்களுக்கு இலவசமாக ஹெல்மெட்டை வழங்க ஆரம்பித்தார். 

இப்படியாக தனக்கு கிடைத்த வருமானத்தின் மூலம் சுமார் 2 கோடி ரூபாய்க்கு 56 ஆயிரம் ஹெல்மெட்டுகளை, ஹெல்மெட் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக வழங்கியுள்ளார் ராகவேந்திர குமார்.

இவரின் இந்த சேவையை பாராட்டி பீகார் மாநில அரசு இவருக்கு 'இந்தியாவின் ஹெல்மெட் மனிதர்' என்ற பட்டத்தை வழங்கி உள்ளது.

மேலும் பக்கத்து மாநிலங்களான உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநில அரசுகளும் ராகவேந்திரகுமாரை பாராட்டியுள்ளது. 

இது மட்டுமில்லாமல் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, பாலிவுட் நடிகர் சோனு சூட் உள்ளிட்டவர்களும் ராகவேந்திரகுமாரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளனர். தற்போது ராகவேந்திரகுமாரை சமூக தளவாசிகளும் பாராட்டி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian Helmet human


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->