இந்தியாவிலேயே முதல் முறை- நதிக்கு அடியில் முதல் மெட்ரோ ரயில்! கொல்கத்தாவில் வெற்றிகரமாக சோதனை ஓட்டம்!
Indias first under river metro train has been successfully tested in Kolkata
நீருக்கு அடியில் மெட்ரோ ரயில் இயக்கி கொல்கத்தா புதிய சாதனை படைத்திருக்கிறது. நதிக்கு அடியில் மெட்ரோ ரயில் இயக்குவது இந்தியாவில் இதுவே முதல் முறையாகும். இந்த ரயிலுக்கான சோதனை ஓட்டம் கொல்கத்தா ரயில் நிலையத்திலிருந்து ஹவ்ரா ரயில் நிலையம் வரை நடைபெற்று வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.
கொல்கத்தாவிலிருந்து ஹவுராவிற்கு மெட்ரோ ரயில் இயக்க ஹூக்ளி நதிக்கடியில் சுரங்கப்பாதை மூலம் ரயில்வே பாதை அமைக்கப்பட்டது. ஹூப்ளி ஆற்றின் ஒரு பகுதியில் உள்ள மகாகரன் ரயில் நிலையத்திலிருந்து நதியின் மறுபுறம் இருக்கும் ஹவ்ரா ரயில் நிலையத்திற்கு இந்த மெட்ரோ ரயில் ஆனது நீருக்கடியில் இயக்கப்பட இருக்கிறது.
இதற்கான அறிமுக நிகழ்ச்சியில் மெட்ரோ நிறுவன உயர் அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மக்களுக்கு நவீனமான வசதிகளை அமைத்துக் கொடுப்பதே எங்கள் நோக்கம் என மற்றொரு நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலேயே நதிக்கு உள்ளே ரயில்வே பாதை அமைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
தற்போது இருந்தே அந்த ரயில் போக்குவரத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. பரிசோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் விரைவிலேயே இந்த ரயில் சேவை தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீருக்கு அடியில் செல்லும் இந்த ரயிலில் பயணிக்க பல்லாயிரக்கணக்கான மக்கள் தயாராக இருக்கின்றனர்.
English Summary
Indias first under river metro train has been successfully tested in Kolkata