''இருக்கைக்கு ஏற்ப கட்டண உயர்வு'': இண்டிகோ விமான நிறுவனம் அதிரடி அறிவிப்பு!
Indigo Airlines Fare increase according seat
இந்தியாவில் உள்ள தனியார் விமான போக்குவரத்து நிறுவனங்களில் இண்டிகோ விமான போக்குவரத்து நிறுவனம் அதிக அளவிலான விமானங்களை இயக்கி வருகிறது.
இண்டிகோ விமான சேவையை இந்திய விமான பயணிகளில் 60% பேர் பயன்படுத்துகின்றனர். மற்ற நிறுவனங்களை விட இண்டிகோ விமான கட்டணம் குறிப்பிட்ட காலங்களில் முன் பதிவு செய்தால் குறைந்த கட்டணத்தில் பயணிக்கலாம்.
இந்நிலையில் இண்டிகோ நிறுவனம் விமான கட்டணத்தை உயர்த்தி உள்ளது. 200க்கும் மேற்பட்ட பயணிகளை சுமந்து செல்லும் விமானங்களில் ஜன்னல் ஓரம் இருக்கைகளை விரும்புபவர்களுக்கும், முன் இருக்கைகளை விரும்புபவர்களுக்கும் கூடுதல் கட்டணங்களை செலுத்த வேண்டும் என ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
![](https://img.seithipunal.com/media/seat-795mb.jpg)
இது உடனடியாக அமலுக்கு வரை உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முன் இருக்கைகளை விரும்புபவர்கள் கூடுதலாக ரூ. 2000 செலுத்த வேண்டும்.
அதேபோல் இருக்கைகளை விரும்புபவர்கள் கூடுதலாக ரூ. 1500 செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இண்டிகோ நிறுவனம் சிறிய நகரங்களை இணைக்கும் வகையில் விமான சேவைகளை இயக்கி வருகிறது. இந்த சிறிய விமானங்களில் கட்டண உயர்வு மாற்றம் செய்யப்பட்டதாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
English Summary
Indigo Airlines Fare increase according seat