இண்டிகோக்கு ₹944.20 கோடி அபராதம்! வருமான வரித்துறை அதிரடி!
IndiGo Airlines Income Tax penalty
பிரபல விமான நிறுவனமான இண்டிகோ மீது ₹944.20 கோடி வருமான வரி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2021-22 மதிப்பீட்டு ஆண்டுக்கான வரி மதிப்பீட்டில் ஏற்பட்ட பிழை காரணமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இதற்கு எதிர்வாக இண்டிகோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மேல்முறையீடு கமிஷனர் முன்பு தாக்கல் செய்த மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது என்ற தவறான புரிதலால் இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், வருமான வரித்துறையின் நடவடிக்கையை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்த உள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், இந்த அபராதம் நிறுவனத்தின் நிதி நிலைமை, தினசரி நடவடிக்கைகள் அல்லது இயக்கத்தின்மீது எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படுத்தாது என்றும் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இண்டிகோ ஏற்கெனவே இந்தியாவின் முன்னணி தனியார் விமான சேவையாக இருந்து வருகிறது. இந்நிலையில், வருமான வரித்துறையின் இந்த முடிவு நிறுவனத்தின் வளர்ச்சியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்துமா என்பது பரவலாக பேசப்படும் சூழலை உருவாக்கியுள்ளது.
English Summary
IndiGo Airlines Income Tax penalty