3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் - விசாரணைக் குழு அமைப்பு.! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பல்வேறு இடங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இந்த நிலையில், தனியார் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் தண்ணீர் புகுந்து மாணவர்கள் நேரில் அடித்துச் சென்றுள்ளனர். 

அவர்களில் மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மூன்று மாணவர்கள் பலியான விவகாரம் குறித்து விசாரணை செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் குழு அமைத்துள்ளது. 

 

இந்தக் குழுவில் கூடுதல் செயலாளர், உள்துறை முதன்மை செயலாளர், டெல்லி காவல்துறை உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்த விசாரணை குழு முப்பது நாட்களில் அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

இதற்கிடையே வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்த மூன்று மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ள டெல்லி துணை நிலை ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

inquiry committee constitude for 3 students died isuue in delhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->